'வெல்கம் மோடி': விண்ணில் விமான புகையில் வரவேற்பு

தினமலர்  தினமலர்
வெல்கம் மோடி: விண்ணில் விமான புகையில் வரவேற்பு

சிட்னி: ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக அவரை வரவேற்கும் விதமாக விமானத்தின் புகை மூலமாக 'வெல்கம் மோடி' என எழுதி வரவேற்பு அளிக்கப்பட்டது வைரலாகியுள்ளது.

பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா நாடுகளை தொடர்ந்து 3 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றார். சிட்னியில் அவரை அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பேனிஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அந்நாட்டின் முன்னணி நிறுவன சி.இ.ஓ.,க்களை சந்தித்து பேசினார். இந்த பயணத்தின்போது ஆஸி., பிரதமர் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீடு, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்பு மற்றும் அதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் இன்று (மே 23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர். இதில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியின்போது பார்வையாளர்கள் 'மோடி, மோடி' என கோஷமிட்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு வருகைத்தரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக விமானத்தின் புகை மூலமாக 'வெல்கம் மோடி' என எழுதி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

சிட்னி: ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக அவரை வரவேற்கும் விதமாக விமானத்தின் புகை மூலமாக 'வெல்கம் மோடி' என எழுதி வரவேற்பு அளிக்கப்பட்டது

மூலக்கதை