மியாமி ஓபன் டென்னிஸ்: சொரானா சிர்ஸ்டியா, சின்னர் அரையிறுதிக்கு தகுதி.! சபலென்கா வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
மியாமி ஓபன் டென்னிஸ்: சொரானா சிர்ஸ்டியா, சின்னர் அரையிறுதிக்கு தகுதி.! சபலென்கா வெளியேற்றம்

மியாமி: அமெரிக்காவில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி போட்டியில் 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் 24 வயதான அரினா சபலென்கா,  32 வயதான ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவுடன் மோதினார். இதில் ஆதிக்கம் செலுத்திய சொரானா சிர்ஸ்டியா  6-4,6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று நள்ளிரவு நடைபெறும் 4வது கால் இறுதி போட்டியில், செக்குடியரசின் பெட்ரா குவிட்டோவா- ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுபவருடன அரையிறுதியில் சிர்ஸ்டியா மோதுவார். மற்றொரு அரையிறுதியில் கஜகஸ்தானின் ரைபகினா- அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் இன்றுநடந்த போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-3,6-1 என பின்லாந்தின் எமில் ருசுவூரியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மூலக்கதை