சிபிஎஸ்இ எச்சரிக்கை ஏப்ரல் 1க்கு முன்பாக பள்ளிகளை திறக்காதீர்

தினகரன்  தினகரன்
சிபிஎஸ்இ எச்சரிக்கை ஏப்ரல் 1க்கு முன்பாக பள்ளிகளை திறக்காதீர்

புதுடெல்லி: வரும் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பாக அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டாமென சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கியது. 10ம் வகுப்பிற்கு வரும் 21ம் தேதியும், 12ம் வகுப்பிற்கு ஏப்ரல் 5ம் தேதியும் தேர்வு முடிவுகிறது. இதற்கிடையே, வரும் கல்வியாண்டில் 10, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே சில பள்ளிகள் இப்போதே வகுப்புகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி விடுத்துள்ள உத்தரவில், ‘குறைந்த காலக்கெடுவுக்குள் முழு ஆண்டுக்கான பாடங்களை முடிப்பதற்காக சில பள்ளிகள் முன்கூட்டியே வகுப்புகளை தொடங்கி உள்ளன. இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். போதிய ஓய்வின்றி படிக்க வைப்பது அவர்களிடம் கவலையையும், பதட்டத்தையும், எரிச்சலையும் உண்டாக்கும். எனவே அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும், ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான கல்வி அமர்வை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை