பிஎன்பி பாரிபா ஓபன் அரையிறுதியில் ஸ்வியாடெக்

தினகரன்  தினகரன்
பிஎன்பி பாரிபா ஓபன் அரையிறுதியில் ஸ்வியாடெக்

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். காலிறுதியில் ருமேனியாவின் சொரானா கிறிஸ்டியாவுடன் மோதிய ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 22 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் எலனா ரைபாகினா (கஜகஸ்தான்) 7-6 (7-4), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை வீழ்த்தினார். அரையிறுதியில் ஸ்வியாடெக் - ரைபாகினா மோத உள்ளனர். இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்), யானிக் சின்னர் (இத்தாலி), டேனில் மெத்வதேவ் (ரஷ்யா), பிரான்சிஸ் டியபோ (அமெரிக்கா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

மூலக்கதை