உக்ரைன் போர்க்குற்றம் ரஷ்ய அதிபர் புடினுக்கு கைது வாரன்ட் : சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை

தினகரன்  தினகரன்
உக்ரைன் போர்க்குற்றம் ரஷ்ய அதிபர் புடினுக்கு கைது வாரன்ட் : சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை

ஹேக்: உக்ரைனில் இருந்து குழந்தைகளைக் கடத்தியதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே ஒருவருடத்தையும் கடந்து போர் நடந்து வரகிறது. இந்தநிலையில் உக்ரைன் நாட்டில் இருந்து  குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்திய போர்க்குற்றத்திற்கும், உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக மாற்றியதற்கும் ரஷ்ய அதிபர் புடின் மீதும், ரஷ்ய குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து அதிபர் புதின் மற்றும் குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா ஆகியோரை கைது செய்வதற்கான பிடிவாரண்ட்டை பிறப்பித்து உள்ளது.

மூலக்கதை