9 வழக்குகளிலும் இம்ரானுக்கு ஜாமீன்

தினகரன்  தினகரன்
9 வழக்குகளிலும் இம்ரானுக்கு ஜாமீன்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 9 வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 8 தீவிரவாத வழக்குகள் உள்பட 9 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் 9வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கேட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான்கான் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இம்ரான்கான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தாரிக் சலீம் ஷேக், பரூக் ஹைதர் அடங்கிய அமர்வு அனைத்து வழக்குகளிலும் இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

மூலக்கதை