நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுவார் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுவார் என அறிவிப்பு

மும்பை: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுவார் என அதிகாபரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கார் விபத்தில் காயமடைந்த டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் இன்னும் முழுமையாக குணமடையாததால் டேவிட் வார்னர் கேப்டனாக செயல்படுவார் என டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வார்னர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 500 ரன்களை குவித்து வந்த வார்னர் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் பெரிதாக சோபிக்கவில்லை.இந்நிலையில் டேவிட் வார்னர் ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணியால் வாங்கப்பட்டார். மற்ற ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளின் கேப்டன்களை அறிவித்து வந்த நிலையில் டெல்லி தங்கள் அணியின் கேப்டன் யார் என அறிவிக்காமல் இருந்தது.இந்நிலையில் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் டேவிட் வார்னரை கேப்டனாக நியமித்துள்ளது. இது டேவிட் வார்னர் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை