மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆர்சிபி அணி!

தினகரன்  தினகரன்
மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆர்சிபி அணி!

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் உ.பி. வாரியார்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.  மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியார்ஸ் அணி ரன்களை குவிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் மட்டும் 46 ரன்களை சேர்த்தார். 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்கையும் இழந்த உ.பி. வாரியார்ஸ் அணி 135 ரன்களை மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய எல்லிஸ் பெர்ரி 3 விக்கெட்டுகளையும், ஆஷா ஷோபனா மற்றும் சோஃபி டிவைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். ஹீதர் நைட், கனிகா அஹுஜா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 18.5 ஓவர்களில் இலக்கை எட்டிய பெங்களூரு தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

மூலக்கதை