5 கோல் போட்டு ஹாலண்ட் சாதனை

தினகரன்  தினகரன்
5 கோல் போட்டு ஹாலண்ட் சாதனை

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று 2ம் கட்ட ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - ஆர்பி லெய்ப்ஸிக் அணிகள் மோதின. முதல் கட்ட ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்திருந்த நிலையில், மான்செஸ்டர் எத்திஹட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் முழுமையாக ஆத்திக்கம் செலுத்திய மான்செஸ்டர் சிட்டி அணி 7-0 என வென்று அசத்தியது. அந்த அணியின் எர்லிங் ஹாலண்ட் (22 வயது) 5 கோல் போட்டு அசத்தினார். குண்டோகன், டி புருயின் தலா 1 கோல் போட்டனர். நடப்பு சீசனில் விளையாடிய அனைத்து தொடர்களிலும் சேர்த்து ஹாலண்ட் இதுவரை 5 ஹாட்ரிக் உள்பட மொத்தம் 39 கோல் அடித்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் மிகக் குறைந்த வயதிலும், விரைவாகவும் 30 கோல் அடித்த வீரர் என்ற சாதனை ஹாலண்ட் வசமாகி உள்ளது. அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பிரேசில் வீரர் லூயிஸ் அட்ரியானோ ஆகியோரை தொடர்ந்து  ஒரு சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் 5 கோல் போட்ட இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். லெய்ப்ஸிக் அணிக்கு எதிராக மான்செஸ்டர் சிட்டி அணி 8-1 என்ற மொத்த கோல் அடிப்படையில் அபாரமாக வென்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.

மூலக்கதை