இந்தியாவுடன் ஒருநாள் தொடர் ஆஸி. அணிக்கு ஸ்மித் கேப்டன்

தினகரன்  தினகரன்
இந்தியாவுடன் ஒருநாள் தொடர் ஆஸி. அணிக்கு ஸ்மித் கேப்டன்

சிட்னி: இந்திய அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 2வது போட்டி விசாகப்பட்டணத்திலும் (மார்ச் 19), 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் மார்ச் 22ம் தேதியும் நடக்க உள்ளன. தாயார் உடல்நலம் மோசமானதால் ஆஸி. அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் அவசரமாக நாடு திரும்பிய நிலையில், 3வது மற்றும் 4வது டெஸ்டில் ஆஸி. அணி ஸ்மித் தலைமையில் விளையாடியது. சில தினங்களுக்கு முன் கம்மின்ஸ் தாயார் காலமானதால், அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டித் தொடரிலும் ஆஸி. அணி ஸ்மித் தலைமையில் களமிறங்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஸ்மித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், ஷான் அபாட், ஆஷ்டன் ஏகார், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், ஆடம் ஸம்பா.

மூலக்கதை