இறப்பு வதந்தி - பார்த்திபன் கொடுத்த பதிலடி!!

தினமலர்  தினமலர்
இறப்பு வதந்தி  பார்த்திபன் கொடுத்த பதிலடி!!

ஒத்த செருப்பு சைஸ்-7, இரவின் நிழல் படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு மூன்று படங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ள பார்த்திபன், அந்த படங்களின் தலைப்பையும் சமீபத்தில் டுவிட்டரில் அறிவித்திருந்தார். அதோடு சில தினங்களுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறைவாசிகளுக்காக புத்தகங்களை மடிப்பிச்சை எடுத்தார்.

இந்த நிலையில் பார்த்திபன் இறந்து விட்டதாக ஒரு யூடியூப் சேனலில் செய்தி வெளியானதை அடுத்து அந்த செய்திக்கு நறுக்கென்று ஒரு பதிலடி கொடுத்துள்ளார் பார்த்திபன். அந்த பதிவில், 'நொடியில் மரணம் அடைவதும் மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை. நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலம் ஆவதின் காரணம் புரியவில்லை. நெகட்டிவிட்டிஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம். மக்களுக்கு பரப்புவோம்' என ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் பார்த்திபன்.

மூலக்கதை