ஆஸ்கரை நெருங்கியது 'நாட்டு நாட்டு' பாடல் இறுதிப் பரிந்துரையில் தமிழ் ஆவணப்படம்

தினமலர்  தினமலர்
ஆஸ்கரை நெருங்கியது நாட்டு நாட்டு பாடல் இறுதிப் பரிந்துரையில் தமிழ் ஆவணப்படம்லாஸ் ஏஞ்சலஸ் ஆர்ஆர்ஆர் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற, 'நாட்டு... நாட்டு...' என்ற பாடல், திரைப்படத்தில் இடம்பெற்ற சிறந்த பாடலுக்கான பிரிவிலும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவண குறுப்பட பிரிவிலும் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

உலக சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படும் பல்வேறு விருதுகளில், ஆஸ்கர் விருது முக்கிய இடம் வகிக்கிறது. 2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மார்ச் 12ல் நடக்கிறது.

இதில், 23 பிரிவுகளில் போட்டியிடும் திரைப்படங்களின் இறுதி பரிந்துரை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு வழங்கப்படும் விருது, சிறந்த, 'ஒரிஜினல் சாங்' என்ற பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த இறுதி பரிந்துரை பட்டியலில் தெலுங்கு திரைப்படமான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு... நாட்டு...' பாடல் இடம் பிடித்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இந்த படத்துக்கு கீரவாணி இசையமைத்துள்ளார். இவர், மரகதமணி என்ற பெயரில் தமிழ் படங்களிலும் இசையமைத்துள்ளார். இந்த பாடலை கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோர் பாடியுள்ளனர்; சந்திரபோஸ் எழுதி உள்ளார்.

இந்த பாடல், சமீபத்தில் 'கோல்டன் குளோப், கிரிட்டிக்ஸ் சாய்ஸ்' விருதுகளை வென்று சாதனை படைத்தது. தற்போது, இந்த பாடல் ஆஸ்கர் விருதை நெருங்கி உள்ளது.

ஆவண குறும்பட பிரிவில், தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட, தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் இறுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

கார்த்திகி கான்சால்வே என்ற பெண் இந்த ஆவண குறும்படத்தை இயக்கி உள்ளார்.

ஆவண திரைப்படப் பிரிவில், ஷானக் சென் இயக்கிய ஆல் தட் பிரீத்ஸ் என்ற படம் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

லாஸ் ஏஞ்சலஸ் ஆர்ஆர்ஆர் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற, 'நாட்டு... நாட்டு...' என்ற பாடல், திரைப்படத்தில் இடம்பெற்ற சிறந்த பாடலுக்கான பிரிவிலும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவண

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை