ஜம்முவில் சோகம்: சிலிண்டர் வெடித்து பெண், குழந்தை பரிதாப பலி

தினகரன்  தினகரன்
ஜம்முவில் சோகம்: சிலிண்டர் வெடித்து பெண், குழந்தை பரிதாப பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டம் புஃப்லியாஸ் பகுதியில் உள்ள சண்டிமார் கிராமத்தில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்தது. இதில் சுவர்கள் இடிந்து நொறுங்கியது. வீட்டில் இருந்த 35 வயது பெண், 3 வயது குழந்தை, தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். மற்றொரு குழந்தை காயமடைந்தது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படை வீரர்களும் வந்து தீயை அணைத்தனர். சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மூலக்கதை