கண்டி வீதியில் கோர விபத்து – நான்கு இளைஞர்கள் உயிரிழப்பு!

TAMIL CNN  TAMIL CNN
கண்டி வீதியில் கோர விபத்து – நான்கு இளைஞர்கள் உயிரிழப்பு!

கண்டி – திகன வீதியில் மெனிக்கின்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த நான்கு இளைஞர்களும் பணித்த வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோதியதனாலேயே இன்று(சனிக்கிழமை) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 17 மற்றும் 19 வயதிற்கிடைப்பட்ட திருகோணமலை, மஹியங்கனை, உகன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். The post கண்டி வீதியில் கோர விபத்து – நான்கு இளைஞர்கள் உயிரிழப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை