77–வது பிறந்தநாள் விழா: வாழப்பாடி ராமமூர்த்தி சிலைக்கு, சு.திருநாவுக்கரசர்...

தினத்தந்தி  தினத்தந்தி
77–வது பிறந்தநாள் விழா: வாழப்பாடி ராமமூர்த்தி சிலைக்கு, சு.திருநாவுக்கரசர்...

சென்னை,

இதையொட்டி, நேற்று காலை 10 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராஜீவ்–வாழப்பாடியார் அறக்கட்டளை அலுவலகத்தில் உள்ள வாழப்பாடி ராமமூர்த்தியின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சு.திருநாவுக்கரசர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாழப்பாடி ராமமூர்த்தி திருவுருவ படத்திற்கு காலை 10.30 மணிக்கு சு.திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுகளின் போது, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

அதை தொடர்ந்து காலை 11 மணியளவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.அப்சல் தலைமையில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சென்னை சத்தியமூர்த்தி பவனில், சு.திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.

மூலக்கதை