ரூபாய் நோட்டு வாபஸ்; 2016 தொடக்கத்திலேயே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை ஆர்பிஐ...

தினத்தந்தி  தினத்தந்தி
ரூபாய் நோட்டு வாபஸ்; 2016 தொடக்கத்திலேயே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை ஆர்பிஐ...

புதுடெல்லி, 
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இடையிலான ஆலோசனையானது கடந்த வருட தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டது என பாராளுமன்ற குழுவிடம் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறிஉள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாராளுமன்ற குழுவில் இடம்பெற்று உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது தொடர்பாக முடிவு எடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பினர். மத்திய ரிசர்வ் வங்கியின் சுயாட்சி தொடர்பாகவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குழுவில் இடம்பெற்று இருந்த பா.ஜனதா உறுப்பினர்கள் அதிகமான கேள்வியை எழுப்பவில்லை என்று தெரிவித்து உள்ளன. ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கையின் போது வங்கிகளுக்கு திரும்பிய பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு? புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு எவ்வளவு? மற்றும் வங்கிகளுக்கு அனுப்பட்டது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 
ரூபாய் நோட்டுகள் வாபஸ் செய்யப்பட்ட விவகாரம் மத்திய அரசின் மாபெரும் நிர்வாகத்தோல்வி எனவும், சட்டபூர்வ கொள்ளை எனவும் கூறிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் குழுவில் இடம்பெற்று உள்ளார், அவரும் இவ்விவகாரம் தொடர்பாக கேள்விகளை எழுப்பி உள்ளார். குழுவிடம் பதில் உரைத்து உள்ள ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் பட்டேல், உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இடையிலான ஆலோசனையானது கடந்த வருட தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டது என்று கூறிஉள்ளார். 
நிதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது பாராளுமன்ற குழு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க நிதி அமைச்சகம் கால அவகாசம் கோரிஉள்ளது என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பான மத்திய அரசு தரப்பு பதிலில் பாராளுமன்ற குழு திருப்தி அடையவைல்லை என்றும் தகவல்கள் குறிப்பிட்டு உள்ளன. உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக ஆலோசிக்க பாராளுமன்ற குழுவின் முக்கிய கூட்டமான நடைபெற்றது. ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக 20-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற பொது கணக்கு குழு கூட்டத்திலும் உர்ஜித் பட்டேல் கலந்துக் கொள்கிறார். 

மூலக்கதை