ரூபாய் நோட்டு தடை விவகாரம்: நாட்டின் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல்,...

தினத்தந்தி  தினத்தந்தி
ரூபாய் நோட்டு தடை விவகாரம்: நாட்டின் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல்,...

மும்பை,
ரூபாய் நோட்டு தடை என்ற அணுகுண்டை வீசி நாட்டின் பொருளாதாரத்தை ஹிரோஷிமா நாகசாகி போன்று சீரழித்துவிட்டார் என்று பிரதமர் மோடியை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்தது.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பழைய ரூ.500,1000 தாள்கள் வாபஸ் பெறப்பட்டு புதிய ரூ. 500, 2000 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பிறகு வங்கியில் பணம் எடுக்கவும் ஏ.டி.எம் இயந்திரங்களில் எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டு பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் நடவடிக்கையை தேசிய ஜனநாய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சம்னாவில் இன்று வெளியான தலையங்கத்தில் மோடியின் நடவடிக்கை குறித்து  கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 
அதில், மோடி யாருடைய பேச்சையும் கேட்கும் மன நிலையில் தற்போது இல்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு 40 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அசோச்சாம் தெரிவித்துள்ளது. இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ரூபாய் நோட்டு தடை என்ற அணு குண்டை வீசியது போல அர்த்தமாகிறது. இந்திய பொருளாதாரத்தை ஹிரோஷிமா நாகசாகி போன்று மோடி சீரழித்துவிட்டார். நாட்டின் எதிர்காலத்தை பற்றி நாங்கள் மிகவும் வருத்தபடுகிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை