தீரச் செயல் புரிந்த 25 சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய விருது 23-ந் தேதி பிரதமர்...

தினத்தந்தி  தினத்தந்தி
தீரச் செயல் புரிந்த 25 சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய விருது
23ந் தேதி பிரதமர்...

புதுடெல்லி,

தீரச் செயல்புரியும் சிறுவர், சிறுமிகளுக்கு ‘பாரத்’ விருது மற்றும் சஞ்சய் சோப்ரா-கீதா சோப்ரா பெயரில் தேசிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. 2016-ம் ஆண்டுக்கான விருதுக்கு 13 சிறுவர்கள், 12 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 2 தோழிகளை மீட்க முயன்று தனது உயிரை விட்ட அருணாசலபிரதேச மாநிலத்தின் 8 வயது சிறுமி தர் பிஜூவுக்கு (இறப்புக்கு பின்பு) பாரத் விருது வழங்கப்படுகிறது. கீதா சோப்ரா விருதை மேற்கு வங்காளத்தின் தேஜாஸ்வேதா (வயது 18), ஷிவானி (17) உள்பட 11 சிறுமிகளும், சஞ்சய் சோப்ரா விருதை உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது சுமித் மம்காய்ன் உள்பட 13 சிறுவர்களும் பெறுகின்றனர்.

விபசார தொழிலுக்கு சிறுமிகளை கடத்தும் கும்பலை பிடிக்க துணிச்சலுடன் மாறுவேடத்தில் சென்று போலீஸ் மற்றும் சி.பி.ஐ.க்கு உதவியதற்காக தேஜாஸ்வேதா, ஷிவானி ஆகியோர் விருது பெறுகின்றனர். சுமித் மம்காய்ன் உறவினரின் உயிரை காப்பாற்றுவதற்காக தைரியத்துடன் சிறுத்தையுடன் போராடியவர் ஆவார்.

23-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, தீரச் செயல் புரிந்ததற்கான விருதுகளை வழங்குகிறார். விருதுபெறும் சிறுவர், சிறுமியர்கள் 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்கின்றனர். 

மூலக்கதை