ஐதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது முடிவு இன்று வெளியாகும்?

தினத்தந்தி  தினத்தந்தி
ஐதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது
முடிவு இன்று வெளியாகும்?

ஐதராபாத்,

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு முன்னாள் எம்.பி. விவேகானந்த் மற்றும் வித்யூட் ஜெய்சிம்மா போட்டியிட்டனர். துணைத்தலைவர் பதவியை கைப்பற்றுவதில் அனில்குமார், இம்ரான் மெமூத் இடையே போட்டி நிலவியது. செயலாளர் பதவிக்கு சேஷ் நாராயணன் நிறுத்தப்பட்டார். உறுப்பினர்கள் வாக்களித்து தேர்தல் நிறைவடைந்த நிலையில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. தாங்கள் உத்தரவு பிறப்பிக்கும் வரை ஐதராபாத் கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று ஐதராபாத் ஐகோர்ட்டு ஏற்கனவே கூறியுள்ளது.

இதையடுத்து கோர்ட்டின் அறிவுறுத்தலின்படி ஓட்டுப்பெட்டி உப்பல் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர இருப்பதால் கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை