இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு...

தினத்தந்தி  தினத்தந்தி
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சு...

லண்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா–இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் பிப்ரவரி 23–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி? செயல்பட்டால் விக்கெட்டுகளை சாய்க்க முடியும் என்பது குறித்து ஆலோசனை பெற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012–13–ம் ஆண்டில் நடந்த இந்திய தொடரில் சிறப்பாக செயல்பட்டு 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய 34 வயதான சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசரையும், ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக இருந்த தமிழக முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான 40 வயது ஸ்ரீராமையும், இந்திய டெஸ்ட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மூலக்கதை