விராட் கோலியின் மெய்சிலிர்க்க வைக்கும் சிக்சர்: திகைப்பில் கிரிக்கெட் உலகம்

தினத்தந்தி  தினத்தந்தி
விராட் கோலியின் மெய்சிலிர்க்க வைக்கும் சிக்சர்: திகைப்பில் கிரிக்கெட் உலகம்

மும்பை,
இந்தியா அணியின் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலி அண்மையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்  போட்டியில்  சதம் அடித்து அசத்தினார். இந்த சதத்தின் மூலம் 2017 ஆம் ஆண்டையும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் விராட் கோலி துவக்கியுள்ளார். 
இந்த போட்டியில் விராட் கோலி அடித்த 122 ரன்கள் மூலம் இந்திய அணி 350 என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்ததது. தனது பேட்டிங்கில் அசாத்திய ஷாட்களை அடித்த விராட் கோலி, இந்த போட்டியில் அடித்த ஒரு சிக்சர் நீண்ட காலம் நினைவில் நிற்கும் வகையில் அமைந்தது. 
கிரிக்கெட் டெக்ஸ்ட் புக் ஷாட் என்று அழைக்கப்படும் உத்திகளை கொண்டே விளையாடும் விராட் கோலியின் ஷாட்கள் பெரும்பாலும் பெரிய அளவில் பெரிது படுத்தி பேசப்படாது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 34 வது ஓவரில் விராட் கோலி அநாயசமாக விராட்  கோலி அடித்த ஒரு சிக்சர் இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது கிரிக்கெட் உலகையே மெய்சிலிர்க்க வைத்தது.
மிகவும் அநாயசமாக தூக்கி அடித்த அந்த பந்து எல்லை கோட்டை சிரமன்றி கடந்தது விராட் கோலியின் திறமையை மெய்பிக்கும் வகையில் இருந்தது. விராட் கோலியின் பேட்டிங்கை பார்த்து பந்து வீச்சாளரே மிரண்டு போனார். விராட் கோலி சிக்சர் அடிக்கவும் வர்ணணை செய்து கொண்டிருந்த நாசர் ஹூசைன் “ என்னா நம்பவே முடியவில்லை” என்றார். சக வர்ணணையாளரான சஞ்செய் மஞ்சேரகர் கூறும் போது, “ இது போன்ற ஒரு ஷாட்டை இதற்கு முன்  நான் பார்த்ததே இல்லை” என்றார்.
இது மட்டுமல்லாது விராட் கோலியின் இந்த ஆட்டத்திறனை பாராட்டி உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் விராட் கோலி அடித்த அந்த சிக்சர் அதிக அளவில் பகிரப்படுகிறது.

மூலக்கதை