மலையாள சினிமாவில் மம்முட்டி ஜோடியாகும் முதல் திருநங்கை நாயகி

தினத்தந்தி  தினத்தந்தி
மலையாள சினிமாவில் மம்முட்டி ஜோடியாகும் முதல் திருநங்கை நாயகி

கோழிக்கோடு

இந்தியாவில் 2 மில்லியன் திருநங்கைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது; மேலும் 2014 ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கும் சம உரிமை இருப்பதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் திருமணம் செய்து கொள்ளவும் சொத்து உரிமையை பெறவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்றும் பணி மற்றும் கல்வி நிலையங்களில் சிறப்பு இட ஒதுக்கீடுகளை பெறவும் அவர்களுக்கு உரிமையுள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க சில் இடங்களில் திருநங்கைகளை நோக்கிய கிண்டல் மற்றும் அவதூறுகள் பேச்சுக்களும் பரவலாக நடைபெற்றுதான் வருகிறது. இருந்தாலும்  இந்தியாவில் தற்போது திருநங்கைகளுக்கு உரிய முக்கியத்தும் அளிக்க விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

திருநங்கைகள் புறக்கணிப்பிற்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்த முதல் இந்திய மாநிலம் கேரளா.இந்தியாவில் திருநங்கைகள் மட்டுமே படிக்கப் போகும் பள்ளிக்கூடம் ஒன்று கொச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் கல்கி சுப்ரமணியம் இந்த பள்ளியை கொச்சியில் திறந்து வைத்தார்.

இத்தகைய கேரளாவில் இருந்து  தற்போது முதல் திருநங்கை சினிமா கதாநாயகி உருவாகி உள்ளார்.மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

21  வயதாகும் அஞ்சலி அமீர் பாலின அறுவை சிகிச்சைக்கு பின் வெற்றிகரமாக முழு பெண்ணாக மாறி உள்ளார். தற்போது இவர் மாடலாக உள்ளார். முதல் திருநங்கை மாடலான இவர் முதல் முறையாக  மலையாள படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

கோவையை சேர்ந்தவரான இவர்  பெர்நபு என்ற படத்தில் மம்முட்டி ஜோடியாக நடிக்க உள்ளார்.நடிகர் மம்முட்டி தனக்கு பயனுளள தகவல்களை அறிவுரையாக வழங்கியதாக அஞ்சலி உற்சாகமாக கூறினார்.

மூலக்கதை