ஓட்டலில் தங்குவதற்கு அறைகள் இல்லை: இந்திய வீரர்கள் கட்டாக் செல்வது தாமதம்...

தினத்தந்தி  தினத்தந்தி
ஓட்டலில் தங்குவதற்கு அறைகள் இல்லை: இந்திய வீரர்கள் கட்டாக் செல்வது தாமதம்...

கட்டாக்,

எதிர்பாராத விதமாக இவ்விரு அணிகளும் கட்டாக் செல்வது ஒரு நாள் தாமதம் ஆகியுள்ளது. செவ்வாய்க்கிழமை வரை (அதாவது இன்று) முதலாவது ஒரு நாள் போட்டி நடந்த புனேயிலேயே தங்கி இருக்கும் படி அணியினர் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

கட்டாக்கில், வீரர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டலில் அறைகள் கிடைக்கவில்லை. திருமண நிகழ்ச்சிக்காக அங்குள்ள அறைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. நாளை (புதன்கிழமை) காலையில் இருந்து தான் அறைகள் தாராளமாக கிடைக்கும் என்று ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளின் பயணத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 11.30 மணிக்கு வீரர்கள் கட்டாக்குக்கு வருகை தருவார்கள் என்றும், மாலையில் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் ஒடிசா கிரிக்கெட் சங்க செயலாளர் ஆசிர்வாத் பெஹெரா தெரிவித்தார்.

மூலக்கதை