ஹெல்மட்டில் பந்து தாக்கியது வங்காளதேச கேப்டன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தினத்தந்தி  தினத்தந்தி
ஹெல்மட்டில் பந்து தாக்கியது வங்காளதேச கேப்டன் ஆஸ்பத்திரியில் அனுமதி


நியூசிலாந்து–வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. இதில் 5 வது நாளான இன்று வங்காளதேச அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடியது. 43 வது ஓவரில் வங்காளதேச கேப்டன் முஷ்பிகுர் ரகீம் ஹெல் மட்டில் பந்து தாக்கியது. நியூசிலாந்து வேகப்பந்து வீரர் சவுத்தி வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மட்டின் பின்பக்கமாக  தாக்கியது. அவரது  தலையின் இடது பகுதியில் பந்து தாக்கியது. இதனால் நிலை குலைந்த  அவர் மைதானத்தில் விழுந்தார் உடனடியாக  மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு அனைத்து வகையான பரிசோதனைகளும்  செய்யப்பட்டன.  பயப்படும்படி  அவருக்கு பிரச்சினை எதுவும் இல்லை. சிகச்சைக்கு பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பினார். ஆனால் களத்தில் இறங்கவில்லை.

மூலக்கதை