திரிஷாவின் படப்பிடிப்பை எங்கும் நடத்தவிட மாட்டோம் நடிகர் கருணாஸ் எச்சரிக்கை

தினத்தந்தி  தினத்தந்தி
திரிஷாவின் படப்பிடிப்பை எங்கும் நடத்தவிட மாட்டோம் நடிகர் கருணாஸ் எச்சரிக்கை

ஜல்லிக்கட்டு தொடர்பான சர்ச்சையில் சிக்கிய நடிகை திரிஷாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  ஜல்லிக்கட்டுக்கு எதிராக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவான பதிவுகள் பலரை மேலும் கோபப்படுத்தியது.

ஆனால் அதை தான் பதிவிடவில்லை என்றும், தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை எனவும் குறிப்பிட்ட திரிஷா, டுவிட்டர் கணக்கை செயலிழக்க செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு நடிகர் சங்க துணைத் தலைவர் என்ற அடிப்படையில் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரிஷாவின் படப்பிடிப்பை எங்கும் நடத்தவிட மாட்டோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை அருகே நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் எம்.எல்.ஏ. தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கபட்டது.

அதனால் காளைகளுடன் வந்தவர் களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதன் பின்னர் அங்கு வந்த கருணாஸ் எம்.எல்.ஏ. இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினார். அத்துடன் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி தாங்கள் ஜல்லிக்கட்டு நடத்தப்போவ தில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் சிவகங்கை பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் கருணாஸ் எம்.எல்.ஏ. கூறிய தாவது:-

 தமிழகம் முழுவதும்  ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தமிழ் உணர்வுமிக்கவர்களின் விருப்பம் இதுதான். இந்த பொங்கல் விழா அரசியல், சாதி, மதம் கடந்து தமிழகத்தில் உள்ள மக்களின் பாரம்பரியமான நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு என்பது வானத்திற்கும், மேகத்திற்கும், மண்ணிற்கும் மரியாதை செலுத்தும் விழா, பீட்டா போன்ற அமைப்புகள் அன்னிய முதலீட்டிற்காக இதை தடை செய்ய நினைக் கின்றனர்.

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்க கர்நாடக அரசு மறுத்து விட்டது. காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் மத்திய அரசு  மறுத்துவிட்டது. ஆனால் நமது பாரம்பரிய விழாவை நடத்த தடை விதிக்கின்றனர். தொடர்ந்து தமிழர்கள் வஞ்சகம் செய்யப்படுகின்றனர்.  எனவே தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

முக்குலத்தோர் புலிப் படை கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த மக்கள் ஆதரவை திரட்டும். நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்தத்தான் இங்கு வந்தோம். ஆனால் போலீசார்  அனு மதி மறுத்ததால் நடத்தாமல் செல்கிறோம்.

நடிகை திரிஷா பீட்டா அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது கண்டனத் திற்குரியது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

சினிமா உலகில் உங்களை தமிழகம் பிரபலமாக்கியது. ஆனால் தமிழர்களின் உணர்விற்கு எதிராக கருத்து தெரிவிப்பதை கண்டிக்கிறோம். தமிழ் உணர்வை இழிவுப்படுத்தும் பீட்டாவிற்கு ஆதரவு கருத்து தெரிவிக்கும்போது நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது-
இவ்வாறு அவர் கூறி னார்.

மூலக்கதை