நாராயண்கன்ச் கொலை வழக்கு: 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது வங்காளதேச நீதிமன்றம்

தினத்தந்தி  தினத்தந்தி
நாராயண்கன்ச் கொலை வழக்கு: 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது வங்காளதேச நீதிமன்றம்

டாக்கா,
கடந்த 2014 ஆம் ஆண்டு வங்காளதேசத்தை உலுக்கிய நாராயகன்ச் கொலை வழக்கில்  நகர முன்னாள் மேயர் உட்பட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வங்காளதேசத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நாராயண்கன்ச் நகரில் 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த கொலையில், நாரயண்கஞ்ச் நகரில் கவுன்சிலராக இருந்த அவாமி கட்சியை சேர்ந்த நுர் ஹூசைன் உள்ளிட்ட 26 பேருக்கு தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. வங்காளதேசத்தில் உள்ள ஆர்.ஏ.பி படைபிரிவுக்கு லஞ்சம் வழங்கி இந்த கொடூர கொலையை அரங்கேற்றியதாக ஹூசைன் மீது குற்றம் சாட்டப்பட்டது.  
ஏழு பேரையும் கடத்தி ஆர்.ஏ.பி படைபிரிவினர் கொலை செய்தததும் இந்த கொலையில் இரண்டு கடற்படை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.  கொலைசெய்யப்பட்டவர்களில் நாராயன்கன்ச் நகரின் அப்போதைய கவுன்சிலர் நஸ்ரூல் இஸ்லாம் வழக்கறிஞர் சந்தன் குமார் சார்கார் ஆகியோரும் அடங்குவர். முதல் நாள் மாயமான ஏழு பேரும் சில நாட்கள் கழித்து ஷித்லகயா   ஆற்றில் சடலமாக மிதந்தனர். 
இந்த கொலை வழக்கு வங்காளதேசத்தையே உலுக்கியது. இந்த கொலையில்,தொடர்பு இருப்பதை அந்நாட்டு போலீஸ் கண்டறிந்தததையடுத்து வழக்கு விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியாவுக்கு ஹுசைன் தப்பி ஓடிவந்தார். ஹூசைனை மேற்கு வங்காளதேச போலீசார் கைது செய்து நாடு கடத்தினர். சில ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் தீர்ப்பு வழங்கிய அந்நாட்டு உள்ளூர் நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

மூலக்கதை