கேதர் ஜாதவின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது: விராட் கோலி

தினத்தந்தி  தினத்தந்தி
கேதர் ஜாதவின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது: விராட் கோலி

மும்பை,
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி, கேதர் ஜாதவின் அபாரமான சதத்தால் இந்தியா 351 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றது.இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
நாங்கள் ஒரு கட்டத்தில் 63 ரன்னில் 4 விக்கெட்டை இழந்து இருந்தோம். அதில் இருந்து மீண்டுதான் 351 ரன் இலக்கை எடுத்து இந்த வெற்றியை பெற்று உள்ளோம்.மூழ்கிய நிலையில் இந்த வெற்றி கிடைத்தது மிகவும் அபாரமானது. 
இதற்கு சிறந்த ‘பார்ட்னர்ஷிப்’தான் காரணம். நானும், கேதர் ஜாதவும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஹர்த்திக் பாண்டியா கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்து வைத்தார்.கேதர் ஜாதவின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் அபாரமாக இருந்தது. நான் பார்த்த சிறந்த ஆட்டம் இதுவாகும். அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன். நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த கணிப்பான ஆட்டம் இதுதான். ஸ்டிரக் ரேட் 150 என்பது தனித்துவம் வாய்ந்தது” என்றார்.

மூலக்கதை