‘சேசிங்’ சதத்தில் கோலி புதிய சாதனை

தினத்தந்தி  தினத்தந்தி
‘சேசிங்’ சதத்தில் கோலி புதிய சாதனை

*ஏற்கனவே 2013–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் 360 ரன்களையும், அதே தொடரில் நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 351 ரன்களையும் சேசிங் செய்திருந்தது. இதில் இன்னொரு ஆச்சரியமான வி‌ஷயம் என்னவென்றால் இந்த மூன்று ஆட்டங்களிலும் விராட் கோலி சதம் அடித்திருந்தார்.

*ஒட்டுமொத்த அளவில் இது 5–வது அதிகபட்ச சேசிங்காக அமைந்தது. 2006–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 435 ரன்களை சேசிங் செய்ததே உலக சாதனையாக நீடிக்கிறது.

*விராட் கோலி மொத்தத்தில் 27 சதங்களை அடித்திருந்தாலும், அதில் 2–வது பேட்டிங்கில் மட்டும் 17 சதங்கள் (96 இன்னிங்ஸ்) எடுத்திருக்கிறார். இதன்மூலம் 2–வது பேட்டிங்கின் போது அதிக சதங்கள் அடித்தவரான இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை (17 சதம், 232 இன்னிங்ஸ்) சமன் செய்தார்.

*அதே சமயம் இலக்கை வெற்றிகரமாக துரத்திபிடித்த இன்னிங்சில் கோலியின் 15–வது சதம் (60 இன்னிங்ஸ்) இதுவாகும். இந்த வகையில் தெண்டுல்கரின் சாதனையை (14 சதம், 124 இன்னிங்ஸ்) முறியடித்தார்.

*65 பந்துகளில் சதம் அடித்த கேதர் ஜாதவ், துரிதமாக சதத்தை எட்டிய 4–வது இந்தியர் ஆவார். அவருக்கு முன்பாக விராட் கோலி (இரண்டு முறை 52 மற்றும் 61 பந்து), ஷேவாக் (60 பந்து), யுவராஜ்சிங் (64 பந்து) ஆகியோர் உள்ளனர்.

மூலக்கதை