பஹ்ரைனில் 2014–ல் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

தினத்தந்தி  தினத்தந்தி
பஹ்ரைனில் 2014–ல் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

துபாய்,

வளைகுடா நாடான பஹ்ரைனில் 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குண்டுவெடிப்பு நடந்தது.

இந்த குண்டுவெடிப்பில் ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஒருவர் உள்பட 3 போலீசார் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அப்பாஸ் அல் சமீயா, சமி முசைமா, அலி அல் சிங்காஸ் ஆகிய 3 பேருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு மரண தண்டனை விதித்தது.

மேலும், 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும், தண்டனைக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்–முறையீடு செய்தனர்.

இந்த மேல்–முறையீட்டின்மீது கடந்த திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்டு, 3 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவர்களது தண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படும் என தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

3 பேர்களது குடும்பத்தினரும் சிறையில் வந்து, தண்டனை விதிக்கப்பட்டவர்களை சந்தித்தப் பேச கடைசியாக வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று காலை 3 பேரையும் சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பஹ்ரைனில் 6 ஆண்டுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறை என தகவல்கள் கூறுகின்றன.

மூலக்கதை