இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: விராட் கோலி சதம்

தினத்தந்தி  தினத்தந்தி
இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: விராட் கோலி சதம்

புனே,

இந்தியா– இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று தொடங்கியது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.  தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி அடித்து ஆடியது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராய் 12 பவுண்டரிகள் அடித்து 73 ரன்கள் அடித்தார்.  இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு 351 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி வோக்ஸ் வீசிய 6வது பந்தினை சிக்சருக்கு விளாசினார்.  இதனால் (93 பந்துகள், 7 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) 105 ரன்களை எடுத்து சதம் அடித்துள்ளார்.

அவருடன் இணைந்து விளையாடும் ஜாதவ் 95 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்திய அணி 251 ரன்களை கடந்துள்ளது.  இந்திய அணி வெற்றி பெற 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 100 ரன்கள் தேவைப்படுகிறது.

மூலக்கதை