ரஞ்சி கிரிக்கெட்:5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி...

தினத்தந்தி  தினத்தந்தி
ரஞ்சி கிரிக்கெட்:5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி...

இந்தூர்,
நடப்பு சாம்பியன் மும்பை-குஜராத் அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மும்பை 228 ரன்னும், குஜராத் 328 ரன்னும் எடுத்தன. 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து இருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 2-வது இன்னிங்சில் 411 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிஷேக் நாயர் 91 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும், கேப்டன் ஆதித்ய தாரே 69 ரன்னும் எடுத்தனர். குஜராத் அணி தரப்பில் சின்டன் காஜா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 312 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய குஜராத் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது. சமித் கோஹெல் 8 ரன்னுடனும், பன்சால் 34 ரன்னுடனும் களத்தில் இருக்கிறார்கள். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.
இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் முதன்முறையாக ரஞ்சி கோப்பையை குஜராத் அணி வென்றது.  குஜராத் அணியில் பார்த்திவ் பட்டேல் 143 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார்.  குஜராத் அணி 312 ரன் இலக்கை 5 விக்கெட் மட்டுமே இழந்து 89.5 எட்டியது.  மும்பை அணி ரன் விவரம் 226-411 குஜராத் அணி 328-313/5

மூலக்கதை