தனி மனிதன் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் மத்திய நிதியமைச்சகம்...

தினத்தந்தி  தினத்தந்தி
தனி மனிதன் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் மத்திய நிதியமைச்சகம்...


புதுடெல்லி:

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனும் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

அதாவது வருமான வரி சட்ட திருத்த மசோதாவில் தங்க நகைகளுக்கு எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பழைய நடைமுறையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி சட்ட திருத்த மசோதா தொடர்பாக நிதியமைச்சகம் அளித்திருக்கும் விளக்கத்தில், தங்கம் தொடர்பாக 1916ன் கீழ் ஏற்கனவே உள்ள விதிமுறைகள் தொடரும்.

அதன்படி, திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம்.

ஆண்களைப் பொறுத்தவரை 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்பட மாட்டாது

அதே சமயம், அதிகப்படியாக தங்கம் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமான வரி கணக்கின் படி வைத்திருந்தால், அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்படாது.

அதே போல, பரம்பரை நகைகள், பழைய தங்கக் கட்டிகளுக்கும் வருமான வரி சட்ட திருத்த மசோதாவில்  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரித்துறை சோதனையின் போது பிடிபடும் கூடுதல் தங்கத்துக்கு 60% வரி விதிக்கப்படும். சரியான விளக்கம் அளிக்கப்பட்டு வரி கட்டப்பட்டிருந்தால் எந்த வரியும் விதிக்கப்படாது.

மூலக்கதை