நாடா புயல் வலுவிழந்து காற்றழுந்த தாழ்வு மண்டலமாக மாறியது- கனமழை பெய்யும்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாடா புயல் வலுவிழந்து காற்றழுந்த தாழ்வு மண்டலமாக மாறியது கனமழை பெய்யும்

சென்னை: புதுச்சேரி அருகே 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகாலையில் வேதாரண்யம் கடலூருக்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தின் கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.கடலில் சீற்றம் அதிகமாக காணப்படும் என்றும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு புயலாக மாறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலாக நிலை கொண்டிருந்ததன் காரணமாகவே கனமழை கொட்டியது. வெள்ளம் ஏற்பட்டது. இந்த ஆண்டும் புயலாக மாறி மீண்டும் வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலாகவே புதுச்சேரி அருகே நிலை கொண்டுள்ளதால் கடலூர், புதுச்சேரியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.கடலூர், புதுச்சேரி, நாகையில் 5ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்து வருவதால் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை