பண மதிப்பு ரத்தை அடுத்து தங்கத்துக்கு கட்டுப்பாடு: பெண்கள் 500, ஆண்கள் 100 கிராம் வைத்துக்கொள்ள அனுமதி

தினகரன்  தினகரன்
பண மதிப்பு ரத்தை அடுத்து தங்கத்துக்கு கட்டுப்பாடு: பெண்கள் 500, ஆண்கள் 100 கிராம் வைத்துக்கொள்ள அனுமதி

டெல்லி: வருமான வரி சட்டத் திருத்த மசோதாவில் நகைக்கு புதிதாக எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வீடுகளில் தங்கநகை இருப்பது குறித்த குழப்பத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி சட்டப்பூர்வமான வருமானத்தை கொண்டு எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வாங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழைய சட்டத்தின் படி திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம். மேலும் ஆண்கள் பழைய சட்டத்தின் படி 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படமாட்டாது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பழைய சட்டத்தில் உள்ள அம்சங்கள் தான் இப்போதும் தொடரும் என வருமானவரி சட்டத் திருத்த மசோதா பற்றி நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் வீடுகளில் தங்கம் வைத்திருப்பவர்களிடம் வருமானவரி கணக்கின் படி தங்கம் பறிமுதல் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பரம்பரை நகைகளுக்கும் பழைய தங்க கட்டிகளுக்கு வருமான வரி சட்டத்திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமான வரி ஆய்வின் போது அனுமதித்த அளவை விட கூடுதலாக தங்கம் இருந்தால் 60% வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழைய சட்டத்தில் 30% வரி மட்டுமே பிடிக்கப்பட்டு வந்தது.

மூலக்கதை