pakistan umpire dropped from champions trophy

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர் ஆசாத் ரவுப்பும் ஈடுபட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளதால் சாம்பியன்ஸ் கோப்பைக்கான நடுவர் குழுவில் இருந்து  அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.  நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் 13 ஆட்டங்களுக்கு நடுவராக பணியாற்றிய இவர், பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி இருப்பதாகவும், இதனால் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம்  ஏற்பட்டுள்ளதாக கூறிய மும்பை போலீசார், அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கையில்  இறங்கியுள்ளது. இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நடுவராக பணியாற்றும் குழுவில் ஆசாத் ரவுப்பும் இடம் பெற்றிருந்தார். தற்போது அவரது  பெயர் சூதாட்டத்தில் அடிபடுவதால், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான நடுவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன்  கூறுகையில், "நடுவர் ஆசாத் ரவுப்பின் நடவடிக்கைகளை கண்காணித்து, அது குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரது நலனுக்காகவும், கிரிக்கெட்  விளையாட்டின் நலனுக்காகவும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து அவரை விலக்குவது என்று முடிவு செய்தோம்" என்றார். 

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் நடுவர் ஆசாத் ரவுப்பும் ஈடுபட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளதால் சாம்பியன்ஸ் கோப்பைக்கான நடுவர் குழுவில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 


நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் 13 ஆட்டங்களுக்கு நடுவராக பணியாற்றிய இவர், பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி இருப்பதாகவும், இதனால் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறிய மும்பை போலீசார், அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நடுவராக பணியாற்றும் குழுவில் ஆசாத் ரவுப்பும் இடம் பெற்றிருந்தார். தற்போது அவரது 
பெயர் சூதாட்டத்தில் அடிபடுவதால், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான நடுவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், "நடுவர் ஆசாத் ரவுப்பின் நடவடிக்கைகளை கண்காணித்து, அது குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரது நலனுக்காகவும், கிரிக்கெட் விளையாட்டின் நலனுக்காகவும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து அவரை விலக்குவது என்று முடிவு செய்தோம்" என்றார். 

 

மூலக்கதை