அப்பல்லோவில் சிங்கப்பூர் மருத்துவர்கள்: கசியும் தகவல்!

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
அப்பல்லோவில் சிங்கப்பூர் மருத்துவர்கள்: கசியும் தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலித கடந்த 3 வார காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அப்பல்லோ மருத்துவர்களுடன் லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் ஜான் பீலே மற்றும் எயிம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்ததாக தகவல்கள் வந்தன. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அப்பல்லோ நிர்வாகம் கூறவில்லை.

இந்நிலையில் சிங்கப்பூர் மருத்துவர்கள் வந்ததன் காரணம் என்ன என்ற தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேசிவ் பிசியோ தெரபி அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்படிருந்தது.

ஜெயலலிதாவுக்கு பிசியோ தெரபி செய்ய மருத்துவர்கள் அடிக்கடி உள்ளே செல்லவேண்டி இருகிறது. ஆனால் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதால் பிசியோ தெரபி செய்ய இயந்திரம் ஒன்றை வரவழைத்துள்ளனர் அப்பல்லோ மருத்துவர்கள்.

இதன் மூலம் மருத்துவர்கள் உள்ளே செல்ல தேவையில்லை. இந்த இயந்திரத்தை இயக்க ஒரு மருத்துவர் போதும். இந்த செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க இந்த தயாரித்த சிங்கப்பூர் கம்பெனி, டாக்டர்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த இயந்திரத்தை பற்றி விளக்கம் அளிக்கவும், பிசியோதெரபி சிகிச்சைகள் குறித்து விவரிக்கவுமே சிங்கப்பூர் மருத்துவர்கள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை