நேபாள நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

தினமணி  தினமணி

நேபாளத்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:

நேபாளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சியான் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் வீடு இடிந்து விழுந்ததில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 78 வயது மூதாட்டி, அவரது உறவினர், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். அந்த இரண்டு சிறுவர்களும் தீஜ் பண்டிகையைக் கொண்டாட அந்த வீட்டுக்கு விருந்தினர்களாக வந்தவர்கள்.

இறந்தவர்களின் உடல்களை கிராம மக்கள் உதவியுடன் போலீஸார் மீட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று போலீஸார் தெரிவித்தனர்.

மூலக்கதை