இலங்கை: போதைப் பொருளை கடத்திச் சென்றதாக இந்தியர் உள்பட 6 பேர் கைது

தினமணி  தினமணி

ஹெராயின் போதைப் பொருளை கடத்தியதாக இந்தியர் ஒருவரையும், இலங்கையைச் சேர்ந்த 5 பேரையும் இலங்கைக் கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுகுறித்து இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படை தளபதியான அட்மிரல் பியல் டி சில்வா, செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை கடலில் கடற்படை அதிகாரிகள் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹெராயினைக்

கடத்திச் சென்ற 6 பேரை அவர்கள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் 2 கிலோ இருந்தது. கேரளத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்திக் கொண்டு வரப்படுகிறது. இதைத் தடுப்பதற்காக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 18 மாதங்களில் மட்டும் 612 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், இலங்கையிலிருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்ல இருந்த 5.5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3.5 கோடியாகும் என்று பியல் டி சில்வா தெரிவித்தார்.

மூலக்கதை