வாடிகன்: புனிதர் பட்ட விழாவில் சுஷ்மா பங்கேற்பு

தினமணி  தினமணி
வாடிகன்: புனிதர் பட்ட விழாவில் சுஷ்மா பங்கேற்பு

வாடிகனில் நடைபெற்ற அன்னை தெரஸாவுக்கு புனிதராக அறிவிக்கும் விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார்.

வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு போப் பிரான்சிஸ் தலைமை வகித்தார். இதைக் காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். இந்த விழாவில், இந்தியா சார்பில் கலந்து கொள்வதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்பட 13 பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.

அவர்களுள் மாநில அளவிலான பிரதிநிதிகளாக முதல்வர்கள் அரவிந்த் கேஜரிவால் (தில்லி) மற்றும் மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்) உள்ளிட்டோரும் அடங்குவர்.

மேலும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், மக்களவை எம்.பி.க்கள் கே.வி. தாமஸ், ஜோஸ் கே. மாணி, அந்தோ அந்தோணி மற்றும் கான்ராட், கே.சங்மா, கோவா மாநில துணை முதல்வர் பிரான்சிஸ் டிசெளஸா ஆகியோரும் இந்திய தரப்பு பிரதிநிதிகள் ஆவர்.

கடந்த 5-ஆம் தேதி அன்னை தெரஸாவின் 19-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பாக அவர் புனிதராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை