விஜய் நடிக்கும் 60-ஆவது படம் "பைரவா'

தினமணி  தினமணி
விஜய் நடிக்கும் 60ஆவது படம் பைரவா'

தெறி படத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நடித்துவரும் புதிய படத்துக்கு "பைரவா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது அவரது 60-ஆவது படமாகும்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் நடந்தும், படத்துக்குப் பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது. எம்ஜிஆர் நடித்து வெளிவந்த "எங்கள் வீட்டுப்பிள்ளை' என்ற படத்தின் தலைப்பே இந்தப் படத்துக்கும் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டன. இதுதொடர்பாக போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் வெளிவந்தன.

இந்த நிலையில், அந்தப் பெயரை பயன்படுத்தவில்லை என விஜயா புரொடக்ஷன் தரப்பில் கூறப்பட்டது.

இந்தப் படத்தின் "முதல்பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) போஸ்டர்கள்' ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளன. இதில், "பைரவா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப் பிடிப்புகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.வெங்கட்ராம் ரெட்டி தயாரிக்கும் இந்தப் படம் விஜய் நடிக்கும் 60-ஆவது படமாகும். பிரபல வசனகர்த்தா பரதன் எழுதி இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

மூலக்கதை