"ஸிகா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும்'

தினமணி  தினமணி
ஸிகா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும்'

உலக நாடுகள் ஸிகா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தயாரான நிலையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸிகா வைரஸ் பரவல் குறித்த தற்போதைய நிலைமையை ஆராய ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவர் டாக்டர் டேவிட் ஹேமன் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

ஸிகா வைரûஸ பற்றிய புரிதல் மற்றும் அதனால் சிசுக்களுக்கு ஏற்படும் நரம்பு மண்டல பிரச்னைகளைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களில் கணிசமான இடைவெளி உள்ளன.

தற்சமயம் அசாதாரண நிகழ்வாக உள்ள இந்த பிரச்னை எதிர்காலத்தில் துரதிருஷ்டவசமாக சாதாரண சூழ்நிலையாக உருவெடுக்கலாம். எனவே, இதனை எதிர்கொள்ளும் வகையில் உலக நாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

கொசு ஒழிப்பு மற்றும் அந்த நோய் தாக்கத்துக்கான பயனுள்ள கிகிச்சை முறைகள் கடைபிடிக்கப்படாததே இன்று உலகம் முழுவதும் அந்த வைரஸ் தொற்று பரவியுள்ளதற்கு முக்கிய காரணம்.

ஸிகா வைரûஸ பரப்பும் கொசுக்களிடமிருந்து மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அந்த வகை கொசுக்கள் கடிக்கா வண்ணம், உடல் முழுவதும் மறைக்கும்படியான ஆடைகளை அணிவது, கொசு விரட்டிகளை பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

மூலக்கதை