ஜெயம் ரவியின் புதிய படம் - டிக் டிக் டிக்!

தினமணி  தினமணி
ஜெயம் ரவியின் புதிய படம்  டிக் டிக் டிக்!

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் படங்களின் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜனின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஜெயம் ரவி. மிருதன் வெற்றிப் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி - சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம் இது.

விண்வெளிப் பயணத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்துக்கு டிக் டிக் டிக் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த படத்தின் தலைப்பு இது. அதனால் உரிய அனுமதி பெற்று படத்தை ஆரம்பித்துள்ளார்கள். ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - இமான்.

மூலக்கதை