பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: 14 பேர் சாவு

தினமணி  தினமணி
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: 14 பேர் சாவு

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த குண்டுவெத்ததில் 14 பேர் பலியாகினர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள தாவோ நகரில் இரவு நேர சந்தையில் திடீரென்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 14 பேர் பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டனர். குண்டுவெடிப்பு சம்பவத்திற்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதனிடையே குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை