‘டிமாண்டி காலனி' இயக்குநரின் அடுத்தப் படத்தில் நயன்தாரா!

தினமணி  தினமணி
‘டிமாண்டி காலனி' இயக்குநரின் அடுத்தப் படத்தில் நயன்தாரா!

டிமாண்டி காலனி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர், அஜய் ஞானமுத்து. இவருடைய அடுத்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்துக்கு இமைக்கா நொடிகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். ஆனால் அவர் ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை. அதற்கான நடிகை விரைவில் தேர்வு செய்யப்படுவார்.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு வசனம் - பட்டுக்கோட்டை பிரபாகர். அக்டோபரில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

மூலக்கதை