'கோயம்பத்தூரின் வளர்ந்து வரும் தயாரிப்பு'க்கான விருதினை பெற்றது ஜுவெல் ஒன்

தினமணி  தினமணி
'கோயம்பத்தூரின் வளர்ந்து வரும் தயாரிப்பு'க்கான விருதினை பெற்றது ஜுவெல் ஒன்

கோவை: கோவையில் இயங்கி வரும் எமரால்டு ஜுவெல்லரி இன்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவான ஜுவெல் ஒன், 'கோவையின் வளர்ந்து வரும் தயாரிப்பு' என்ற 2016ம் ஆண்டுக்கான விருதினை தட்டிச் சென்றது.

ஏராளமான டிசைன்களில், ஏற்றுமதித் தரத்தில், பாரம்பரியம், கலாச்சாரம் நிறைந்த, தூய தங்கத்தில் செய்யப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்தவையாக இருப்பதால் ஜுவெல்ஒன் தங்க நகைகளுக்கு கோவையின் வளர்ந்து வரும் தயாரிப்புக்கான விருது கிடைத்துள்ளது.

இந்திய வணிகம் மற்றும் தொழிற்சாலை அமைப்பும், கோயம்பத்தூரின் விளம்பரத்துறை கிளப்பும் இணைந்து ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி லீ மெரிடியன் ஹோட்டலில் விருது வழங்கும் விழாவினை சிறப்பாக நடத்தின.

விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜுவெல்ஒன் மேலாண்மை இயக்குநர் கே. ஸ்ரீனிவாசன் கூறுகையில், தங்க நகைகளுக்கான அனைத்து எல்லைகளையும் எட்டி ஜுவெல்ஒன் நகைகள் சாதனை படைத்தன. அடுத்து வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளில் புதுமை படைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

மிகச் சிறப்பாக இயங்கி வரும் ஜுவெல்ஒன் நிறுவனம் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் தங்களது நகைக் கடைகளை திறக்கவும், பிறகு அதனை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை