அரசியல்சாசன கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவு: தாய்லாந்து அரசின் வேண்டுகோள்

BBC  BBC
அரசியல்சாசன கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவு: தாய்லாந்து அரசின் வேண்டுகோள்

தாய்லாந்து மக்கள் தங்களது வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு தாய்லாந்து அரசு வலியுறுத்தியது. அந்த வாக்கெடுப்பில் புதிய அரசியல் சாசனத்துக்கு வாக்காளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

பிரதமர் பிரயோத் ஜன் ஓச்சா இந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது என்றும், நாடு அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராக வேண்டிய நேரம் என்றும் குறிப்பிட்டார்.

59 சதவீதம் வாக்களித்தவர்களில், 61 சதவீத தாய்லாந்து குடிமக்கள் புதிய அரசியலமைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

நியமிக்கப்பட்ட செனட் சபையில், ராணுவ தளபதிகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பு புதிய அரசியல் சாசன வரைவில் அடங்கியுள்ளது.

வாக்களிப்பதற்கு முன்பாக இந்த அரசியல் சாசனத்திற்கு எதிராக பிரசாரம் செய்வது தடை செய்யப்பட்டது. டஜன் கணக்கான சமூக ஆர்வலர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

மூலக்கதை