வங்கதேச முன்னாள் எம்.பி.க்கு மரண தண்டனை

BBC  BBC
வங்கதேச முன்னாள் எம்.பி.க்கு மரண தண்டனை

வங்கதேசத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு போர் குற்றங்கள் தொடர்பான நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நாட்டின் முக்கிய இஸ்லாமியவாத கட்சியான ஜமாத்- இ-இஸ்லாமியின் முன்னாள் மாணவ தலைவரான சகாவத் ஹொசைன், சித்ரவதை மற்றும் கொலைகளுக்கான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு 1971-ல் வங்கதேச சுதந்திர போர் நடந்த ஆண்டிற்கு இட்டுச் செல்கிறது.

போர் குற்றங்கள் தொடர்பான நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தொடர் மரண தண்டனைகளில் இது சமீபத்தியது ஆகும்.

இந்த ஆண்டு மே மாதம், ஜமாத்- இ-இஸ்லாமி கட்சியின் முன்னாள் தலைவர் தூக்கிலிடப்பட்டார். இந்தக் கட்சி, தனது தலைவர்கள் போரின் போது அட்டூழியங்கள் செய்ததாகக் கூறப்படுவதை மறுக்கிறது. மேலும், இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளது.

மூலக்கதை