சிங்கத்துடன் செல்ஃபி எடுத்த ஜடேஜாவுக்கு அபராதம்

BBC  BBC
சிங்கத்துடன் செல்ஃபி எடுத்த ஜடேஜாவுக்கு அபராதம்

அரிய வகை இனமாக கருதப்படும் ஆசிய சிங்கத்தின் முன் புடைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய கிரிக்கெட் வீர்ர் ரவீந்திர ஜடேஜாவிற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜடேஜா மற்றும் அவரின் மனைவி, குஜராத் மாநிலத்தின் மேற்கு பகுதியில் இருக்கும் கிர் தேசிய பூங்காவில், தரையில் அமர்ந்துள்ளது போல் தோன்றும் அந்த புகைப்படம் ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த பூங்காவில் பார்வையாளர்களுக்கு வண்டியை விட்டு இறங்குவதற்கு அனுமதி இல்லை.

சில தொடர் தாக்குதலையடுத்து, குஜராத் வனதுறை அதிகாரிகள் சிங்கங்களுடன் செல்ஃபி எடுக்கும் ஆபத்து குறித்து அறிவித்த அடுத்த நாளில் இந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக இறுதி விசாரணை அறிக்கை உயரதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

சில தொடர் தாக்குதலையடுத்து, குஜராத் வனதுறை அதிகாரிகள் சிங்கங்களுடன் செல்ஃபி எடுப்பதில் உள்ள ஆபத்து குறித்து எச்சரித்த அடுத்த நாளில் ஜடேஜாவின் இந்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக இறுதி விசாரணை அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், இது தொடர்பாக ஜடேஜாவை பதில் அளிக்குமாறும் கேட்டுள்ளதாகவும் ஆனால் ஜடேஜா வராததால், அவரது மாமனார் ஹர்தேவ்சிங் சோலங்கி அவருக்கு பதிலாக கையெழுத்து வாக்குமூலத்தையும், அபராத்தைதையும் கட்டிவிட்டதாகவும் குஜராத்தின் தலைமை வன பாதுகாவலர் ஏ, எஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

27 வயதான ஜடேஜாவின் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் சிங்கங்களை நோக்கி அவர் கையசைத்து “குடும்ப புகைப்படம் கிர் பூங்காவில் நல்லதொரு நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்” என்ற வாசகத்துடன் பதிவிடப்பட்டிருந்தது.

மேலும் ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரீவாவுக்கு பின்னணியில் சிங்கங்கள் இருப்பது போன்ற புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது.

கிர் தேசிய பூங்காவில் மட்டும் தான் ஆசிய சிங்கங்கள் வன சூழலில் விடப்பட்டுள்ளன, மேலும் ஆப்ரிக்க சிங்கங்களை காட்டிலும் உருவத்தில் சற்று சிறியதாக இருக்கும் இவை அரிய வகை இனமாக 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

மூலக்கதை