ஏமன் தலைநகரில் வான்வழி தாக்குதல்: 15 பேர் பலி

BBC  BBC
ஏமன் தலைநகரில் வான்வழி தாக்குதல்: 15 பேர் பலி

ஏமனில் ஹவ்தி போராளிகளை எதிர்த்து சண்டையிடும் சவுதி தலைமையிலான கூட்டுப்படை, பல மாதங்களில் முதல்முறையாக தலைநகர் சனாவில் வான் வழி தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதனால் விமான நிலையம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணிக்கான சவுதி செய்தி தொடர்பாளர், ராணுவம்தான் சனாவில் நடைபெற்ற தாக்குதலின் இலக்குகள் என தெரிவித்துள்ளார்.

ஆனால் சனாவின் மேற்கு பகுதியில், தொழிற்சாலை ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாகவும் அதில் பெரும்பாலானோர் பெண்கள் எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல், வார இறுதியில் ஐ.நா நடுநிலை விகித்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை