அஸ்ஸாமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழப்பு

BBC  BBC
அஸ்ஸாமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் சற்று நேரத்துக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

பலர் உயிரிழந்திருப்பதை, மாநில காவல்துறை தலைவர் முகேஷ் சகாய் பிபிசியிடம் உறுதியளித்தார். ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முழுமையாகத் தெரியவில்லை என்றார்.

கீழ் அஸ்ஸாம் பகுதியில் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள பாலாஜார் பகுதியில், மக்கள் கூட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதியில் தேசிய போடோலேண்ட் முன்னணி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கித் தாக்குதல் நடத்தினார்கள்.கோக்ரஜாரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இந்தப்பகுதி அமைந்துள்ளது.

அந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தலைவர் முகேஷ் சகாய் தெரிவித்தார். ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உடனடியாகத் தெரிவிக்க முடியாது என்றார்.

போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தீவிரவாதி ஒருவர் அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அஸ்ஸாம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, அஸ்ஸாம் முதல்வர் சோனோவால், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

மூலக்கதை